இமைகளை
திருடிச்சென்றாய்
இனி…
உறக்கம் என்பதே
பகல் கனவாக…..
அமைதியாகத்தான்
நீ
ரயிலேறிச்சென்றாய்….
இன்னும்
தடதடத்துக்கொண்டே
இருக்கிறது…
என் மனது !
மழைக்கால ஆயத்தங்கள்
தென்படும்போது நீ
உன் பிரிவை அறிவித்திருந்தாய்…..
தூறல்கள் சிந்தும்
இடைவெளியில்
மெல்ல மெல்ல
மறைந்து போயிருந்தாய்….
பெருமழை
கொட்டிக்கொண்டிருக்கிறது
ஒரு சடலத்தின் மீது……
மீராவின் கண்ணன்..
மீராவிடமே..
எனதாருயிர் ஜீவன்..
எனை ஆண்டாளே…
வாழ்க நீயும் வழமுடன்
என்றும் வாழ்கவே…..
தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
மெளனியாக
முகமற்றவளாக
முகம் காட்ட மறுப்பவளாக
புறக்கணித்துச் செல்பவளாக
பழைய புன்னகையாக
கவனம் கலைப்பவளாக
நினைவாக
தொடமுடியாத தூரத்தில்தான்இருக்கிறாய் நீ
நீயாக.
——————–
-லதாமகன்
அழுதுவடியும் நாட்குறிப்பைவைத்துக்கொண்டு என்ன செய்வது
உன் நினைவுகளை வைத்துக்கொண்டு
போலிப் புன்னகையை
வைத்துக்கொண்டு
புரியாதவர்களை வைத்துக்கொண்டு
மெளனங்களை வைத்துக்கொண்டு
நிராகரிக்கப்பட்ட காதலை
வைத்துக்கொண்டு என்ன செய்வது
—————————————————
-லதாமகன்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும் (2)
(ராஜா என்பார் மந்திரி என்பார்)
கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கும் வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை (2)
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழியில்லை
(ராஜா என்பார் மந்திரி என்பார்)
நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு (2)
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
ஒரு உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன் (2)
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு
(ராஜா என்பேன் மந்திரி என்பேன்)
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
திரைப்படம்: சுட்டபழம் ஒரு கேள்விக்குறி (2011)
விவாதத்தின் இறுதி….
”உன் உடம்பெல்லாம்
விஷம்”
எனச்சொல்லி
தொடர்பறுத்தாய்…
அளவுக்கு மிஞ்சிய
காதல்..
விஷமாகிப்போனதை
எங்கனம் நான் உரைக்க….
நீ
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருப்பதாய்
ஒரு பெண் சொன்னாள்….
எனக்குத்தான்
புரியவே இல்லை….